அமெரிக்க கடனீட்டு பத்திரங்களின் வட்டி வீதத்தில் ஏற்பட்ட மாற்றம்
அமெரிக்காவின் 30 ஆண்டுகால திறைசேரி கடனீட்டு பத்திரங்களின் வட்டி வீதங்கள் இன்றையதினம்(24.9.2026) 5.44 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், இது 2004 ஆம் ஆண்டிற்கு பின்னரான மிக உயர்ந்த மட்டமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி, அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் பணவீக்க அழுத்தம் போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் அரசாங்க கடனீட்டு பத்திரங்களை வைத்திருக்க கூடுதல் வருவாயை எதிர்பார்த்து கோரிக்கை விடுப்பதே இந்த திடீர் உயர்விற்கு முக்கிய காரணமாகும்.
நிதி நெருக்கடி
இதன் நேரடி விளைவாக, அமெரிக்க வீடமைப்பு கடன்களுக்கான ரவட்டி வீதங்கள் 7 சதவீதமாக உயர்வடைந்துள்ளதுடன், இது நுகர்வோருக்கு உடனடி நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் மற்றும் உலக நாடுகளின் கடன் சுமைகள் குறித்த கவலைகள் சர்வதேச பத்திர சந்தைகளில் தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அமெரிக்காவிற்கு சமாந்தரமாக ஜப்பானின் 10 ஆண்டுகால கடனீட்டு பத்திர வட்டி வீதம் 1996 ஆம் ஆண்டிற்கு பின்னரான உச்சத்தை எட்டியுள்ளதுடன், ஜெர்மனியும் 2026 ஆம் ஆண்டில் வரலாற்று சாதனை அளவாக 525.5 பில்லியன் யூரோக்களை கடனாக பெறவுள்ளதாக அறிவித்துள்ளது.
முதலீடு
கடன் வாங்கும் செலவுகளை கட்டுப்படுத்த அமெரிக்க திறைசேரி திணைக்களம் பல்வேறு தலையீடுகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், திறைசேரி பத்திரங்களின் வட்டி வீதங்கள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

இருப்பினும், அமெரிக்க தொழில் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையிலான முதலீடுகளின் வளர்ச்சி காரணமாக முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan