கனடாவுடன் வலுக்கும் அரசியல் மோதல்: இந்தியா மீது பகிரங்க குற்றச்சாட்டு
கனடாவின்(Canada) 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் இந்தியாவும்(India), பாகிஸ்தானும்(Pakistan) தலையிட்ட விடயம் தொடர்பில் புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக கனடாவை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.
எனினும் மேற்படி குற்றச்சாட்டை இந்தியா முற்றாக மறுத்துள்ளது.
மேலும், தமது அரசாங்கத்தின் உள் விவகாரங்களில் கனடா தலையிடுகின்றது என இந்தியாவால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கை
கடந்த ஜனவரி மாதம், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) 2019 மற்றும் 2021 கனேடிய பொதுத் தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய கனேடிய பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கனடாவில் 2019 மற்றும் 2021இல் நடந்த தேர்தல்களில் இந்தியா - பாகிஸ்தான் தலையிட்டதாக அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய - பாகிஸ்தான் ஆதரவு
குறிப்பாக இந்தியாவில், 2021 தேர்தலின் போது, அரசு முகவர்கள் மூலம், இந்தியர்கள் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் கவனம் செலுத்தி, அங்கு இந்திய ஆதரவு வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்திய அரசாங்கத்தால் இரகசியமாக நிதியளிக்கப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் அரசாங்கம் 2019 தேர்தலில் அதன் தேசியவாத சார்பு வேட்பாளர்களுக்கு இந்த வழியில் நிதி உதவி வழங்கியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கனேடிய ஜனாதிபதியால் எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், இப்போதும் கூட கனடாவின் உள்ளகத் தேர்தலில் தலையிடவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |