வாக்காளர் பட்டியல்களை விரைவாக ஆய்வு செய்ய வெள்ளை மாளிகைக்கு கடும் அழுத்தம் - ட்ரம்பின் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பெறப்பட்ட குறைந்தது 47 மாநிலங்களின் வாக்காளர் பட்டியல்களை மிக விரைவாக பரிசீலனை செய்யுமாறு கூட்டாட்சி முகவரகங்களுக்கு வெள்ளை மாளிகை கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம், உள்வாரி மின்னஞ்சல் தரவுகளை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறியும் நோக்கில், சட்டவிரோத வாக்காளர் நடவடிக்கை திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான அதிகாரிகளை உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் இந்த ஆய்வில் ஈடுபடுத்தியுள்ளது.
வெளிநாட்டில் இருப்பவர்களின் வாக்குகள்
பொதுவெளியில் கிடைக்கப்பெறும் வாக்காளர் பட்டியல்களில் சில தனிப்பட்ட தரவுகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் தரவுத் தரகர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த அவசர ஆய்வுகளின் போது தவறான தகவல்கள் பதிவாக வாய்ப்புள்ளதாக வல்லுநர்களும் அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நபர்கள் மற்றும் வெளிநாடுகளில் பிறந்த அமெரிக்கப் பிரஜைகள் கூட இதில் சட்டவிரோத வாக்காளர்களாக தவறாகக் அடையாளப்படுத்தப்படும் அபாயம் உள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தேர்தல்களில் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் வாக்களிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.
இருப்பினும், இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கும் விமர்சகர்கள், நியாயமான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam