ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!
மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை விரைவில் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (06) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒதுக்கீடுகள்
2025 வரவு செலவு திட்ட யோசனையின் ஊடாக விவசாய, கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அந்த ஒதுக்கீடுகளை உரிய வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
விவசாய தரவுகளின் காணப்படும் முழுமையற்ற தன்மையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களில் தவறு ஏற்பட்டதையும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாய உற்பத்திகளுக்கு சந்தைக்குள் நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதுடன் விவசாயிகளின் பாதுகாப்பை போலவே நுகர்வோருக்கும் நியாயம் செய்யப்படும் வகையில் விலைகளை நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
