மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்: மனநல மருத்துவரின் எச்சரிக்கை
கைத்தொலைபேசிகளை பயன்படுத்தி நடத்தப்படும் இணையவழி கற்றல்-கற்பித்தல் செயல்முறை வெற்றிகரமான முறையாக இல்லை என நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த யுனெஸ்கோ அமைப்பின் விசேட அறிக்கையில் பாடசாலை மாணவர்களுக்கு கைத்தொலைபேசி தடை செய்யப்பட வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, “பாடசாலைகளில் மாணவர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதால் அவர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம்.
சிறந்த கற்றல் அல்ல
அண்மைக் நாட்களில், கோவிட்-19 தொற்றுநோயால், பாடசாலைகளில் கைத்தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கண்டோம், அதேபோல், பாடசாலை மாணவர்களிடையே வீட்டில் கைத்தொலைபேசிகளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.
அத்துடன், இந்த பாடசாலை மாணவர்கள் கற்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் எதிர்மறையான பல விடயங்களும் நடந்து வருகின்றன.
அதில் ஆசிரியரிடம் நேரடியாகக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இந்த கைத்தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ கற்றுக்கொள்வது, ஆசிரியரிடம் நேரடியாகக் கற்றுக்கொள்வது போல் சிறந்த கற்றல் அல்ல என்பதை யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டியது.
இலத்திரனியல் சாதனங்களின் பாவனையினால் பாடசாலை மாணவர்கள் நடைமுறைக் கல்வியில் இருந்து ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது.
தொலைபேசி கற்றல் வெற்றியடையாது
ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு, உண்மைகளை நன்கு புரிந்து கொண்டு கற்பிப்பது போல் தொலைபேசியில் கற்றல் வெற்றியடையாது.
மேலும் யுனெஸ்கோ அமைப்பு இந்த கைத்தொலைபேசி மூலமாகவோ அல்லது இந்த மின்னணு சாதனத்தின் மூலமாகவோ கற்றலை ஒருபோதும் செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளது.
அத்துடன், பாடசாலை மாணவர்களின் மத்தியில் கைத்தொலைபேசிகளின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருவதால், பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.” என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், உலகம் முழுவதும் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன் கொண்டு வர தடை விதிக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |