புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம்!
37 ஆவது பொலிஸ் மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை, பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அங்கீகாரம்
அரசியலமைப்பு பேரவை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று பிற்பகல் கூடியிருந்த நிலையில், இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து பொலிஸ் மா அதிபருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.
இந்நிலையிலே தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கமைய புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



