பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஷ்பந்து தென்னகோன், அந்தப் பதவியின் கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டதையடுத்து, பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.
இந்நிலையில், பொலிஸ் திணைக்களத்தில் 36 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றியுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி வரை பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரியாவார்.
குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவு
இவர் இதற்கு முன்னர் குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் வழங்கல் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

அவர் கடைசியாக வடமத்திய பதில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றியுள்ளார்.
மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பட்டதாரியாகவும், இலங்கை சட்டக் கல்லூரியின் சட்டத்தரணியாகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
அவர் மனித வள மேலாண்மையில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவராவார்.
மற்றும் கிழக்கு திமோர் மற்றும் ஹைட்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், பொலிஸ் கண்காணிப்பாளராகவும் சேர்ந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        