இலங்கையில் கஞ்சா பயிர் செய்கைக்கு அனுமதி
இலங்கையில் கஞ்சா பயிர் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலீட்டு சபையின் அனுமதியில் அந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு ஏழு வெளிநாட்டு முலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் தம்மிக்க அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“முதலீட்டு சபையின் திட்டத்தின் படி வெளிநாட்டினருக்கும் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
02 மில்லியன் டொலர்
37 வெளிநாட்டு முதலீட்டாளர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தற்காலிகமாக ஆறு மாதம் அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலீட்டாளர்கள் 02 மில்லியன் டொலர் வைப்பு தொகையும் செலுத்த வேண்டும்.
பயிர் செய்கை செய்யப்படும் நிலம் முழுதும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு அதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
சர்ச்சைக்குள்ளான விடயம்
வெளியாருக்கு பயிர்ச் செய்கையை பார்வையிடும் சந்தர்ப்பம் மற்றும் தெரியக் கூடிய தன்மை இருக்க கூடாது. இதற்காக முதலீட்டு சபைக்கு சொந்தமான மீரிகமவில் உள்ள 64 ஏக்கர் காணியும் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்படும் கஞ்சாவில் எண்ணெய் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. அத்தோடு மருத்துவ பயன்பாட்டுக்காவும் ஏற்றுமதி செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணிலின் ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த டயனா கமகேவும் கஞ்சா பயிர்ச் செய்கை தொடர்பில் திட்டம் தீட்டப்பட்ட நிலையில் பெரும் சர்ச்சைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



