பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் திடீர் பரிசோதனை
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் திடீர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் விடுதிகளுக்கு வெளி நபர்கள் நீண்டகாலமாக உணவு வழங்கி வருகின்றனர்.
இவர்கள் தொடர்பில் தொடர்ச்சியான பல முறைப்பாடுகள் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இற்கு கிடைக்கப்பெற்றது.
சட்ட நடவடிக்கை
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம்(30) விடுதிகளிற்கு உணவு வழங்குவோரிடம் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதோடு, குறைபாடுகளை விரைந்து நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், எதிர்காலத்தில் தொடர்ந்து குறைபாடுகள் இனங்காணப்படும் இடத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan