மக்களின் கோவிட் பாதுகாப்பு கருதி பொலிஸின் விசேட பரிசோதனை
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினால் கோவிட் வைரஸ் காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி விசேட பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையில் வாழைச்சேனை பிரதான வீதியில் கோவிட் பாதுகாப்பு கருதி பரிசோதனை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தற்போது கோவிட் வைரஸ் மூன்றாவது அலை தாக்கத்தின் காரணமாக கோவிட் தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றனர்.
இதன்போது முகக்கவசம் அணியாது சுகாதார விதிமுறையை மீறி வீதியில் பயணிப்போரைப் பிடித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், முகக்கவசம் இல்லாதவர்களுக்கு பொலிஸாரினால் முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், வாகனங்களின் மட்டுப்படுத்தப்பட்டளவில் பயணம் செய்யுமாறு எச்சரிக்கை வழங்கப்பட்டது.
அத்தோடு கோவிட் பாதுகாப்பு தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாரினால் விழிப்புணர்வு
ஸ்டிக்கர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கி
வைக்கப்பட்டது.



