யாழில் செம்மணி அவலத்தை வெளிப்படுத்திய சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை
விளையாட்டு விழாவில் இடம்பெற்ற வினோத உடைப் போட்டியில், செம்மணியில் இடம்பெற்ற அவலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வேடமணிந்து கலந்து கொண்ட சிறுவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் அழைத்து விசாரித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(13.10.2026) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு சென். பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்றுமுன்தினம்(11.10.2026) அன்று புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
விசாரணை
இந்த விளையாட்டு விழாவின் வினோத உடைப் போட்டியில் கலந்துகொண்ட ஒரு சிறுவன், கடந்த காலத்தில் செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற மனிதப் புதைகுழி மற்றும் படுகொலைச் சம்பவங்களைச் சித்தரிக்கும் வகையில் புதையுண்ட சிறுவனாகக் காட்சிப்படுத்தியிருந்தான்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்திய மருதங்கேணிப் பொலிஸார், மேற்படி சிறுவனின் பெற்றோரை இன்றைய தினம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
13ஆவது திருத்தத்தை முடக்கிவைத்து தேர்தலை இழுத்தடிக்கின்றதா அரசு..! ரஞ்சித் மத்தும பண்டார கடும் சாடல்
