செலவினங்களை தெரிவிக்காத பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணை!
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவினங்களைத் தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தை மீறித் தெரிவிக்கத் தவறிய 1,042 வேட்பாளர்கள் மற்றும் 197 கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்கள் மீது விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் அல்லது வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தங்கள் நிதிநிலை அறிக்கைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரியந்த வீரசூரிய
எனினும் அதனை மீறியவர்களுக்கு எதிராக , சம்பந்தப்பட்ட தேர்தல் மாவட்டங்களில் உள்ள பொலிஸ் பிரிவுகளில், விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளைத் தயாரித்து 2025, ஜனவரி 31 க்குள் சட்ட ஆலோசனைக்காக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |