கடவுள் இருக்கின்றாரா? என்ற கேள்விக்குரிய பதிலே தற்போதைய விடயத்திற்கும் பொருந்தும்!

Sri Lanka Politician Sri Lankan political crisis India
By Navoj Feb 18, 2023 09:29 AM GMT
Report

கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்ற கேள்விக்கு எத்தகைய பதில் கிடைக்குமோ அதே பதில் தான் தலைவரின் விடயத்திலும் இருக்கின்றது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

பழ.நெடுமாறன் கூறிய வார்த்தைகள் 2024, 2025 காலத்தில் ஒரு மாற்றத்தைத் தோற்றுவிக்கும்.

இன்றைய தினம் (18.02.2023) காரைதீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடவுள் இருக்கின்றாரா? என்ற கேள்விக்குரிய பதிலே தற்போதைய விடயத்திற்கும் பொருந்தும்! | Inparasa About Pala Nedumaran Press Meet

நெருங்கிய தொடர்பு

எங்களுடைய தேசியத் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்ற செய்தி அண்மைக் காலமாக பேசுபொருளாக இருக்கின்றது.

அந்தவகையில் நெடுமாறன் வெளியிட்ட கருத்து உண்மையிலேயே அவருக்கு ஏதேனும் தகவல்கள் வந்து சொல்லியிருக்கலாம்.

ஏனெனில் நாங்கள் போராட்டத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே அவர்கள் எமது போராட்டத்துடனும், தலைவருடனும் நெருங்கிய தொடர்புடனும் இருந்து செயற்பட்டவர்.

கடவுள் இருக்கின்றாரா? என்ற கேள்விக்குரிய பதிலே தற்போதைய விடயத்திற்கும் பொருந்தும்! | Inparasa About Pala Nedumaran Press Meet

40 வருடத்திற்கு மேலாக எமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருப்பவர் என அறிந்துள்ளோம்.

அவ்வாறான ஒருவர் இவ்வாறான செய்திகளை விட்டிருப்பதென்பது தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமில்லாமல் ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்கும் விடயமாக இருக்கின்றது.

கடவுள் இருக்கின்றாரா? இல்லையா?

இன்று தலைவர் தொடர்பான விடயத்தில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்ற கேள்விக்கு எத்தகைய பதில் கிடைக்குமோ அதே பதில் தான் தலைவரின் விடயத்திலும் இருக்கின்றது.

அனைத்து மதங்களும் கடவுள் இருக்கின்றார் என்ற ஏதோவொரு நம்பிக்கையில் தான் செயற்படுகின்றன. அதேபோலவே எங்கள் தேசியத் தலைவர் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் போராளிகளின் ஊடாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

எங்களது தேசியத் தலைவர் இல்லை, இறந்துவிட்டார் என்று சொல்லுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை.

ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு புனிதர்களின் வரலாறு இருப்பது போன்று எமது இனத்திற்கு எமது தலைவரின் வரலாறு இருக்கின்றது.

கடவுள் இருக்கின்றாரா? என்ற கேள்விக்குரிய பதிலே தற்போதைய விடயத்திற்கும் பொருந்தும்! | Inparasa About Pala Nedumaran Press Meet

இன்று நடக்கின்ற விடயங்கள் எல்லாம் எமது தலைவர்களால் தீர்க்க தரிசனமாக 1990களிலேயே சொல்லப்பட்டவை.

எமது போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட காலம் தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற சர்ச்சை வரும் அக்காலத்தின் பின் எமது தலைவரின் பெயர் ஏதொவொரு வகையில் வெளிவரும் அந்த சமயத்தில் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் வடகிழக்கு இணைந்த தீர்வொன்று தலைவரூடாகப் பெற்றுக் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

எங்கள் தலைவருக்கு என்றுமே சாவில்லை. அவர் என்றும் எம் மக்கள் மனதில் இருந்து அழிக்கப்பட முடியாதவர்.

விடுதலையை நோக்கிப் போராடிய இயக்கம்

தற்போதைய நிலைமையில் அடுத்தது என்ன என்ற விடயத்தை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. தலைவர் இல்லை என்று அரசாங்கம் சொல்லட்டும்.

இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லை, கைது செய்யப்பட்டவர்கள் இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். அவர்களில் சிலர் தற்போது வந்தார்கள், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டும் இருக்கின்றார்கள்.

ஒரு விடுதலையை நோக்கிப் போராடிய இயக்கம். போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்று பதின்மூன்று வருடங்களாக எந்தவித ஆயுதமேந்திய போராட்டங்களையும் மேற்கொள்ளாத நிலையில் எமது இயக்கத்தின் போராட்டத்தை சர்வதேசம், ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும்.

கடவுள் இருக்கின்றாரா? என்ற கேள்விக்குரிய பதிலே தற்போதைய விடயத்திற்கும் பொருந்தும்! | Inparasa About Pala Nedumaran Press Meet

அந்த இயக்கம் எதற்காகப் போராடியதோ அந்த உரிமையைக் கொடுக்க வேண்டும் அந்த நியதி இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில் இயங்கவில்லை

போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இன்று வரை விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில் இயங்கவில்லை என்ற ரீதியில் நாங்கள் நேர்மையானவர்கள், நேர்த்தியானவர்கள் என்ற அடைப்படையைப் புரிந்து கொண்டு எமது தேசியத் தலைவரின் கோட்பாட்டின் கீழ் ஜனநாயக ரீதியில் அனைத்து நாடுகளும் இணைந்து தலைவரின் வழிநடத்தலில் வடகிழக்கு இணைந்த தாயகத்தை அவரின் கைகளில் வழங்கும் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

கடவுள் இருக்கின்றாரா? என்ற கேள்விக்குரிய பதிலே தற்போதைய விடயத்திற்கும் பொருந்தும்! | Inparasa About Pala Nedumaran Press Meet

பழ.நெடுமாறன் கூறிய வார்த்தைகள் 2024, 2025 காலத்தில் ஒரு மாற்றத்தைத் தோற்றுவிக்கும்.

தலைவர் மீண்டும் மக்கள் மத்தியில் வருவாராக இருந்தால் அது நிச்சயமாக ஆயுத ரீதியான நடைமுறையாக இருக்காது.

ஜனநாயக ரீதியில் எமது மக்களின் இனவிடுதலைக்கான முன்னெடுப்புகளுடன் வெளிநாட்டு மத்தியஸ்தத்துடனேயே அவர் தோற்றம் பெறுவார் என்று தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US