இனியபாரதி கைது விசாரணையில் திருப்பம்! பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நகர்வு
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறிய பின் கிழக்கில் துணை இராணுவ குழுவாக செயற்பட்டுவந்த கருணாகுழுவின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரான இனிய பாரதி அவரது சகாவான பிள்ளையானால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கில் இடம்பெறும் கைதுகள் தமிழ் மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அண்மையில் இடம்பெற்ற இனிய பாரதி மற்றும் அவரது சகாக்களை தொடர்ந்து இன்னும் கைதுகள் இடம்பெற இருப்பதாக உள்ளக தகவல்கள் உலாவிக்கிக்கொண்டிருக்கிறது.
அம்பாறை மாவட்டத்தில் ஆயுத கலாசாரம் உச்சம் பெற்றிருந்த அந்த நாட்களில் இனியபாரதி நிகழ்த்தியதாக சொல்லப்படும் கொலைகள் கடத்தல்கள்தொடர்பாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இதன்போது துணையாக இருந்தவர்களே கைது செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விசாரணைகளில் பிள்ளையானின் வாக்குமூலம் ஒரு முக்கியமான அரச சாட்சியமாக இருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில் உண்மையில் இனியபாரதிக்கு பின் கைதுகள் தொடருமா ? பிள்ளையானின் வாக்குமூலம் எவ்வாறான தரவுகளை கொண்டது இப்படியான பல கேள்விகளுக்கான பதில்களை தேடி இந்த விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
