பிள்ளையான் பிடித்துக்கொடுத்த முக்கிய புள்ளிகள் -கருணாவை வைத்து காய் நகர்த்தும் இந்திய புலனாய்வு
இனியபாரதியின் கைதினை தொடர்ந்து அவரின் முன்னாள் சாரதி கைது செய்யப்பட்டது, இவை தொடர்பில் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தினரிடம் பிள்ளையான் வழங்கிய தரவுகள் என கிழக்கில் தொடரும் கைதுகள், நீதிவேண்டி காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மிகப்பெரும் ஆறுதலாக மாறிவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த கைதுகள் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் தாம் ஏதோ ஒரு விதத்தில் செயற்பட்டு கொண்டிருக்கிறோம் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தும் ஒரு அரச உத்தியா என்ற கேள்வி எழுகின்றது.
இவை நீதிக்கானது என்றால் பிள்ளையான் வழங்கியிருக்கும் தகவல்களுக்கு அமைய இதனை ஆராய்வதில் அரச தரப்பிற்கு இருக்கும் சிக்கல்களில் பிரதானமானது போலிப்பெயர்களை உடைய இராணுவ புலனாய்வாளர்கள் பற்றியதாகும்.
உண்மையில் பிள்ளையான் குற்றங்களை ஒப்புக்கொண்டு ஒரு கைதுப்பட்டியலை வழங்கினாரா? கிழக்கில் இன்னமும் கைதுகள் தொடருமா? உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படுவார்களா ?
இதுபோன்று கேள்விகளுக்கும் அண்மைக்காலமாக கருணா தனது கதையென கூறித்திரியும் வார்த்தைகளின் பின்னணியில் இருக்கும் இந்திய புலனாய்வாளர்கள் தொடர்பிலும் ஆராய்கிறது இன்றைய அதிர்வு...

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
