கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய ஐரோப்பிய நாட்டவர் யார்? (Video)
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி விமான கடவுச்சீட்டு மூலம் பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குறித்த நபர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய நபர் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதற்கமைய குறித்த வெளிநாட்டவர் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த நபர் 35 வயதுடைய போலந்து நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது
2019ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருடியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புபட்ட செய்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு - அதிரடி படையினர் நடவடிக்கை
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam