தேர்தலுக்கு முன்னர் மைத்திரியைப் பற்றி பரப்பப்பட்ட தகவல்! பகிரங்கமாக அறிவித்த அமைச்சர்

Election PrasannaRanatunga MaithripalaSirisena
By Benat Feb 03, 2022 10:44 PM GMT
Report

மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்புடைய எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என பாராளுமன்றத் தேர்தலின் போது நான் கூறினேன். மைத்திரிபால சிறிசேனவைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால்தான் அவ்வாறு தெரிவித்தேன். அவர் ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதி என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

அரசாங்கத்தில் இருந்து விலகும் நாளுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், தனக்கு விலகும் யோசனை இல்லை என்றும், தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்றும் கூறினார். அவ்வாறு கூறி 24 மணி நேரத்திற்கு முன்னர் அரசிலிருந்து விலகி விட்டார்.

அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்பதால் அவருடன் நாம் அரசியல் செய்யவோ, அவரை நம்பவோ முடியாது. கடந்த பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்ததன் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்கள் ஐ.தே.கவில் இணைந்திருந்தால், அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த நேரத்திலும் சந்தர்ப்பவாத முடிவை எடுத்தனர்.

அதனால்தான் தேர்தலுக்கு முன்னதாகவே அந்தச் செய்தியைக் கொடுத்தேன், அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்தேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவும், மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கத்தை விமர்சிக்க முயற்சிக்கிறார்.

சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இப்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தபோது சு.கவுக்கு உதவிய அதன் தீவிர உறுப்பினர்கள் அனைவரும் இன்று பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைக் கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியல் கூட்டணி அமைக்க முயற்சித்தால், மக்கள் அவருடன் கைகோர்க்க மாட்டார்கள்.

அவர் அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவும் முயற்சிக்கிறார். அத்தகைய நிலையை நாங்கள் நாட விரும்பவில்லை.

அரசாங்கத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லத் தேவையான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி செய்வது போன்று எவரும் அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கலாம் மற்றும் சுட்டிக் காட்டலாம்.

நாங்கள் எப்போதும் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு செவிசாய்ப்பதுடன், தவறுகளை சரிசெய்யத் தயாராக இருக்கின்றோம்.

ஏறக்குறைய 5.5 மில்லியன் மக்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளனர், இதனால் அரசாங்கத்தை விமர்சிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் கூட்டணி பங்காளியாக இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்க யாராவது முயற்சித்தால், அவ்வாறானவர்கள் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும். அப்போது அவர்களின் விமர்சனத்தை ஏற்க தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US