பிரித்தானியாவில் முடக்க நிலை தொடர்பில் வெளியான தகவல் - அதிக பாதிப்புக்குள்ளான லண்டன்
பிரித்தானியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் முடக்க நிலை அவசியமில்லை என தேசிய சுகாதார சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் தொற்றினை சமாளிக்க புதிய முடக்க நிலை நடவடிக்கைகள் எதுவும் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பிரித்தானிய நிபுணர்கள் குழுவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய சுகாதார சேவையின் தலைவர் கிறிஸ் ஹொப்சன் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான நோய்வாய்ப்பட்ட முதியோர்களின் அதிகரிப்பு இல்லாததால், அரசாங்கம் மேலதிக முடக்க நிலையை அறிவிக்கவில்லை என்பதனை சுகாதார பிரிவினர் புரிந்து கொண்டுள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் நேற்று முன்தினம் 189,213 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த வாரத்துடன் ஒப்பிட்டால் இது 53 சதவீத அதிகரிப்பாகும். அத்துடன் அன்றையதினம் 332 பேர் உயிரிழந்துள்ளனர்.
எப்படியிருப்பினும் இதற்கு முன்னர் காணப்பட்ட கொரோனா அலைகளுடன் ஒப்பிடும் போது தற்போது தொற்றாளர்கள் மிதமான பாதிப்பிற்கே உள்ளாகுகின்றார்கள்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைகள் வேகமாக அதிகரித்து வருகின்ற போதிலும், அதிக எண்ணிக்கையிலான தீவிர நோய்வாய்ப்பட்ட வயதானவர்கள் இல்லாதது குறிப்பிடத்தக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதென கிறிஸ் ஹொப்சன் குறிப்பிட்டுள்ளார். இதனால் பிரித்தானியா முடக்க நிலைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் சளி போன்ற அறிகுறிகளைக் கொண்ட முக்கால்வாசி பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என நிபுணர்களில் ஒருவரான க்ளாரி ஸ்டீவ்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பாதிப்பினால் லண்டன் நகரமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதென புள்ளிவிபரங்கள் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
