ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
வெளிப்படைத்தன்மை விடயத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை விட ஊழியர் சேமலாப நிதியம் (EPF)பின்தங்கியுள்ளதாக வெரிட்டி ரிசர்ச் (Verité Research) அறிவித்துள்ளது.
வெரிட்டி ரிசர்ச் (Verité Research) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்
ஊழியர் சேமலாப நிதியம் (EPF) இலங்கையின் மிகப்பெரிய நிதி நிறுவனமாக இருந்தாலும், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் அறக்கட்டளைகள் போன்ற மூன்றாம் தரப்பினர் சார்பாக நிதிகளை நிர்வகிக்கும் பிற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல் வெளிப்படுத்தல் குறைவாகவே உள்ளது.
நேற்று (24) வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சேமிப்புகளை நிர்வகிக்கும் பிற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, ஊழியர் சேமலாப நிதியம் குறைவான தகவல்களை, குறைந்த விவரங்களுடன், குறைந்த இடைவெளியில் மற்றும் தாமதமாக வெளிப்படுத்துவதாக அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியின் மேலாளராகிய இலங்கை மத்திய வங்கி (CBSL), அது ஒழுங்குபடுத்தும் பிற நிதி நிறுவனங்களை விட ஊழியர் சேமலாப நிதிக்கு குறைந்த அளவிலான வெளிப்படைத்தன்மையையே பயன்படுத்துகிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
வெளிப்படைத்தன்மை தரநிலை
நிதித் தகவல்களை உரிய நேரத்தில், விரிவாக மற்றும் எளிதில் அணுகக்கூடிய வகையில் வெளியிடுவதற்கான சர்வதேச அளவுகோல்களை ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பூர்த்தி செய்யத் தவறுகின்றமை தெரியவந்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தக் குறைபாடுகள் இன்னும் தீவிரமானவையாகின்றன.

தனியார் துறை ஊழியர்கள் சட்டப்படி ஊழியர் சேமலாப நிதிக்கு பங்களிக்க கடமைப்பட்டுள்ளனர், மேலும் நிதியின் நிர்வாகத்தில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களால் தங்கள் சேமிப்பைத் தங்கள் விருப்பப்படி எடுக்கவும் முடியாது.
எனவே, எதிர்கால நலன் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, உலகளாவிய வெளிப்படைத்தன்மை தரநிலைகளுக்கு இணங்குவதே அவர்களிடம் உள்ள ஒரே பாதுகாப்பாகும்.
2019-ல் வெளியிடப்பட்ட அறிக்கைகளால் வெளிப்படுத்தப்பட்டபடி, ஊழியர் சேமலாப நிதியம் கடந்த காலத்தில் நிதி மோசடிக்கு ஆளாகியுள்ளமையால் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை தொடருந்து வரலாற்றில் மோசமான நிலை! சகல தொடருந்து நிலையங்களிலும் தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு