கோட்டாபய உடனே வீடு சென்றாலே நாட்டுக்கு விடிவு! சந்திரிகா அம்மையார்
"ஜனாதிபதி கதிரையில் கோட்டாபய ராஜபக்ச இருக்கும் வரைக்கும் இலங்கைக்கு சர்வதேசம் உதவ முன்வராது.இந்த பொருளாதார நெருக்கடியும் தீராது மேலும் உக்கிரமடையும்.
எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலகி வீடு சென்றால் தான் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்காத ரணில்
"கோட்டாபய ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரைக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவாலும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் தான் பிரதமர் ரணில் நாளாந்தம் ஊடகங்கள் முன்னிலையில் பிரச்சினைகளை மாத்திரம் கூறுகின்றாரே தவிர அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கின்றார் இல்லை.
இலங்கையின் தற்போதைய நிலைமை நாளாந்தம் மோசமடைகின்றது. மக்கள் பொறுமை
இழந்துவிட்டார்கள்.
இந்த நாட்டை மீட்க வேண்டுமெனில் ராஜபக்ச குடும்பம் கூண்டோடு வீடு செல்ல
வேண்டும். அப்போது தான் நாட்டுக்கு விடிவு கிடைக்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
