எரிபொருள் கையிருப்புக்கள் தீரும் நிலையில் தகவல் இருட்டடிப்பு!
இணையத்தளம் மூடல்
இலங்கையின் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்ட நிலையில், எரிபொருள் கையிருப்பு பற்றிய தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம் மூடப்பட்டுள்ளது.
fuel.gov.lk என்ற இணையத்தளமே மூடப்பட்டுள்ளது.

தகவல் தடுப்பு
இதன் மூலம் எரிபொருள் விநியோகம் தொடர்பான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் கிடைப்பது குறித்த விரைவான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக இந்த தளம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

கட்டாயப்படுத்தப்பட்ட நடவடிக்கை
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் வழங்கியுள்ள தகவலின்படி, கிடைத்த அறிவுறுத்தல்களின் அடிப்படையில் http://fuel.gov.lk ஐ தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, எரிபொருள் தாங்கிகள், வருவதை முன்கூட்டியே அறிந்துக்கொள்வதன் காரணமாகவே எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள் உருவானதாக தகவல்களும் வெளியாகியிருந்தன.

 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        