ஹசன் நஸ்ரல்லாஹ் மரணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் நச்சுப் புகை கசிவினால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய இராணுவம் தெற்கு பெய்ரூட் பகுதி மீது மேற்கொண்ட தாக்குதலில், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகளின் முதன்மை தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார்.
நச்சுப் புகை கசிவு
அதேவேளை, இஸ்ரேலின் குறித்த தாக்குதலின் போது ஹசன் நஸ்ரல்லாஹ் உட்பட சில முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஹசன் நஸ்ரல்லாஹ் இரகசிய பதுங்கு குழி ஒன்றில் மறைந்து இருந்த போது நச்சுப்புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஹிஸ்புல்லாவின் தலைவர், பதுங்கி இருந்த மறைவிடத்தின் மீது இஸ்ரேல் 80 தொன் வெடிகுண்டுகள் வீசப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பதுங்கு குழியில் நச்சுப் புகை கசிவு ஏற்பட்டுள்ள நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |