பங்களாதேஸில் மீண்டும் வெடித்த போராட்டம்: பொலிஸாரின் தடுப்பு நடவடிக்கை
பங்களாதேஸில் (Bangladesh) மீண்டும் பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு பொலிஸார் போராட்டக்காரர்களை தடுக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய, டாக்காவில் அமைந்துள்ள பங்களாதேஸின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சியில் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் றப்பர் தோட்டாக்களை வீசியுள்ளனர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
அரசுப் பணிகளுக்கான வயது வரம்பை 31இல் இருந்து 35ஆக உயர்த்த வங்காளதேச காபந்து அரசாங்கத்தைக் கோரியே, டாக்காவில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போதே, அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் பிரதம மந்திரி சேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்த ஓகஸ்ட் மாத போராட்டத்திற்கு பின்னர், பங்களாதேஸின் தலைநகரில் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |