தாஜுதீனின் கொலை தொடர்பில் பிமலுக்கு கிடைத்துள்ள முக்கிய தகவல்!
வஷீம் தாஜுதீன் கொலை தொடர்பாக சமீபத்தில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
இந்தக் குற்றங்களை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறிபால அல்லது ஞானரத்ன செய்யவில்லை என்றும், நாட்டை ஆண்டவர்கள் அந்தக் குற்றங்களை மூடி மறைத்தார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் 60 மாதங்கள். பன்னிரண்டு மாதங்கள் மட்டுமே கடந்துள்ளன. இந்நிலையில் அடுத்த 48 மாதங்களின் இறுதிக்குள், சட்டத்தின்படி அனைவரும் உள்ளே இருப்பார்கள் என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தாஜுதீன் கொலை
இதற்கிடையில், தாஜுதீன் கொலை தொடர்பாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலைப்பட தேவையில்லை. என்று தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க கூறியிருந்தார்.
அதன்படி இந்த விடயத்தில் மக்கள் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும், தாஜுதீன் கொலை, வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் குறித்து இந்த நாட்டு மக்கள் ஓரளவு விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த சம்பவங்கள் குறித்த விசாரணைக்கு இடையூறு ஏற்படாத வகையில், பொதுமக்களுக்கு ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள உரிமை உண்டு. அத்தோடு இன்று சட்ட நடைமுறையாக்க நிறுவனங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.





புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ராணுவத்தைக் களமிறக்கும் பிரித்தானிய அரசு News Lankasri
