இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
கடல் வழியாக 111 கிலோகிராம் ஹெரோயினை நாட்டிற்குள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானிய பிரஜை ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து 2016 ஏப்ரல் 01 அன்று நடத்திய கூட்டு சோதனையைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல், இறக்குமதி குற்றச்சாட்டில் 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பாகிஸ்தானிய பிரஜையான அப்பாஸ் ஷபீர் ஹுசைன், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இருப்பினும், நிபந்தனைகளை மீறியதற்காக சந்தேகநபரை மீண்டும் கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
மேலும் சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை 0718591881 என்ற எண்ணில் அல்லது பணியகத்தின் 0112343333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri
