பெண் ஒருவரை கைது செய்ய பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்
தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்ய ரக்வானை பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி, ரக்வானை பொலிஸ் பிரிவின் கலஹிட்டிய, பெலவத்த வீதி, கொடகவெல பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தன்னிடமிருந்து 364,000 மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ரக்வானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டாளரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்த பெண் இந்தத் திருட்டை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்க நகைகள்
மேலும் சந்தேக நபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 071-8591394 அல்லது 071-8593808 என்ற தொலைபேசி ஊடாக அழைக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ராணுவத்தைக் களமிறக்கும் பிரித்தானிய அரசு News Lankasri
