முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கமானது 2.2 சதவீதமாக பதிவாகியிருந்தது.
பணவீக்கம் அதிகரிப்பு
அதேநேரம் கடந்த மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக பதிவாகியிருந்த உணவு பணவீக்கமானது ஏப்ரல் மாதத்தில் 2.8 சதவீதமாக அதிரித்துள்ளது.

இது தவிர உணவல்லா பணவீக்கமானது கடந்த மார்ச் மாதத்தில் 2.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.
இந்தநிலையில் ஏப்ரல் மாதத்தில் 6.8 சதவீதமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ராஜபக்சர்கள் வெளிநாட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் எப்போது இலங்கைக்கு திரும்பும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்
இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்
ரஜினி கமல் இணையும் படம்.. ஓடிடி வியாபாரம் இத்தனை கோடி தானா? அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan