ராஜபக்சர்கள் வெளிநாட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் எப்போது இலங்கைக்கு திரும்பும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2015இல் ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் திறைசேரியிலிருந்து 4 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்கள் உகண்டாவில் மறைத்து வைத்திருக்கும் பணத்தை எப்போது மீண்டும் கொண்டு வருவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, 2015 ஜனவரி 7 அன்று, நில்வளா திட்டத்திற்காக திறைசேரியிலிருந்து 4 பில்லியன் ரூபாயை விடுவித்தார்.
பணம் எந்த நாட்டில் இருக்கிறது
எனினும் இன்றுவரை, அத்தகைய திட்டம் எதுவும் அல்லது குறைந்தபட்சம் அதற்கான அடிக்கல் கூட நாட்டப்படவில்லை. ஒருவேளை பேருந்து ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், அவர் இலங்கைக்கு ஒரு பேருந்தைக் கூட கொண்டு வரவில்லை.

இழந்த பணம் எந்த நாட்டில் இருக்கிறது அல்லது அது எப்படி இருக்கிறது என்பது முக்கியமற்றது. அதை நாட்டிற்காக எவ்வாறு மீட்பது என்ற பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகவில்லை.
நாட்டிற்கு வெளிப்படுத்த முடியாத செல்வத்தைத் திரும்பப் பெறுவதற்கான சட்டங்கள் நடைமுறையில் இருப்பதால், அந்தச் சட்டங்கள் செயல்படுத்தப்படும். அது குறித்து எந்தப் பீதியும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam