வெளிநாடுகள் பலவற்றில் குவிக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் பணம்
கடந்த ஆட்சிக்காலங்களின் போது நடந்த பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் மூலம் சம்பாதித்த பணம் பல்வேறு நாடுகளில் குவிக்கப்பட்டிருக்கலாம் என்று தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முந்தைய அரசாங்கங்களின் போது, தலைவர்கள் அந்தந்த நாடுகளின் ஆதரவோடு வெளிநாடுகளில் பதுக்கி வைத்ததாகக் கூறப்படும் பணம் குறித்து தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
நாடுகளின் ஆதரவு
விசாரணைகளுக்குப் பிறகு, பணம் மறைத்து வைத்துள்ள நபர்கள், தொகை மற்றும் நாடுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அரசாங்கம் வெளியிடும் என்று எதிர்பார்க்கின்றோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த விசாரணைகளை நடத்துவதற்கு வெளிநாடுகள் அரசாங்கத்திற்கு உதவி வருகின்றன. விசாரணைகளை நடத்துவதற்கு வெளிநாடுகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றன. முந்தைய அரசாங்கங்களுக்கு விசாரணைகளை நடத்த எந்த நாடும் ஆதரவளிக்கவில்லை.

எனினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இந்த அந்த நாடுகள் உதவ முன்வந்துள்ளன. இந்த ஆதரவின் காரணமாகவே பல பாதாள உலகக் குற்றவாளிகளை எங்களால் நாட்டுக்கு அழைத்து வர முடிந்தது.
முந்தைய ஆட்சிக் காலங்களில் தலைவர்களால் செய்யப்பட்ட மோசடி மற்றும் ஊழல் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் மூலம் சம்பாதித்த பணம் பல்வேறு நாடுகளில் குவிக்கப்பட்டிருக்கலாம் என நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் தனியார் வான் பாதுகாப்புப் படைகள் அறிமுகம்: முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க புதிய முயற்சி
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
ரஜினி கமல் இணையும் படம்.. ஓடிடி வியாபாரம் இத்தனை கோடி தானா? அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் Cineulagam