இரகசியமாக உருக்குலைக்கப்படும் வட்டுவாகல் பாலம்! தமிழரசுக்கட்சியில் உள்ளவர்களை வெளியேறுமாறு கோரிக்கை
ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் தற்போது இரகசியமாக உருக்குலைக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகள் தொடர்பில் நேற்றையதினம் (29.04.2026) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டதிலே காணப்படும் எமது அடையாளங்கள் இரகசியமாக அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
இந்த விடயங்களிலே அக்கறை கொள்வதற்கு கூட எமது கட்சியினர் முன்வருவதில்லை. தமிழரசுக்கட்சி இன்று துரோகக் கூட்டத்தின் கையில் சிக்கி இருக்கின்றது.
வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகளை ஆராயாத தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சிறீதரனுக்கு கட்சியை வழிநடத்த என்ன தகுதி இருக்கின்றது.
உடனடியாக அவர்கள் கட்சியில் இருந்து வெளிறேி ஜனநாயக ரீதியில் அதனை இயங்க விட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்




அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
ரஜினி கமல் இணையும் படம்.. ஓடிடி வியாபாரம் இத்தனை கோடி தானா? அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் Cineulagam