பைனான்ஸ் தளத்தில் ஊடுருவல் - பில்லியன் கணக்கிலான கிரிப்டோ சொத்துக்கள் முடக்கம்
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான பைனான்ஸ் (Binance), பாதுகாப்புப் பிரச்சினை மற்றும் சந்தேகத்திற்குரிய ஊடுருவல் காரணமாகத் தனது வைப்புத்தொகை (Deposit) மற்றும் திரும்பப் பெறலை (Withdrawal) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
திருட்டைத் தடுக்கும் நோக்கில் பைனான்ஸ் தளம் சுமார் 3 பில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோ சொத்துக்களை முடக்கியுள்ளது.
பயனர்களின் நிதியை மீட்க
அத்துடன், ஏனைய முக்கிய கிரிப்டோ தளங்களான Tether (சுமார் $1.6 பில்லியன்) மற்றும் Circle (சுமார் $800 மில்லியன்) ஆகியவையும் இதில் தொடர்புடைய சொத்துக்களை முடக்கியுள்ளன.

பைனான்ஸின் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ள முன்னாள் தலைவர் சாங்பெங் ஜாவோ (Changpeng Zhao), "இது பைனான்ஸ் மீதான ஊடுருவலாகவே தெரிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பயனர்களின் நிதியை மீட்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஏற்படும் இழப்புகளை நிறுவனம் ஈடுசெய்யும் எனவும், அதிகார பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் பைனான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிட்கொயின் (Bitcoin) விலை சுமார் 5வீதம் வரை சரிந்ததுடன், எத்தேரியம் (Ethereum), சொலானா (Solana) போன்ற பிற முன்னணி கிரிப்டோகரன்சிகளின் விலைகளும் சரிவைச் சந்தித்துள்ளன.
மோசமடையும் ஷிரந்தியின் உடல்நிலை! பெரும் கவலையில் நாமல் மற்றும் குடும்பத்தினர்: பின்னணியில் தீவிர சட்ட ஆலோசனை