பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு - 3 அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்
நிகவரெட்டிய மருத்துவமனையில் கடந்த ஒக்ரோபர் 27ஆம் திகதி பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கடமை தவறிய குற்றச்சாட்டின் கீழ் கொபேகனே பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்களும் ஒரு கொன்ஸ்டபிளும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே பொலிஸ் பாதுகாப்பில் இருந்த வேளை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
மேலும் சந்தேகநபர் கடந்த ஒக்ரோபர் 25ஆம் திகதி பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு கொபேகனே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் இரண்டு நாட்கள் பொலிஸ் பாதுகாப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், அவர் ஒக்ரோபர் 27ஆம் திகதி நிகவரெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பலத்த காயங்களுடனேயே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை கைதுசெய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
போருக்காக வேலை செய்ய முடியாது... 22 நாடுகளில் போராட்டத்தில் குதித்த துறைமுகத் தொழிலாளர்கள் News Lankasri