வரலாற்றுக் கடமையில் இருந்து தவறாது தீவக மண் : சிறீதரன் நம்பிக்கை
இன விடுதலைப் போரியல் வரலாற்றிலும், அதன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் தீவக மண்ணும், அதன் மக்களும் வழங்கி வரும் பங்களிப்பு மிகக் கனதியானது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான முதன்மை வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சிறீதரன், தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக நேற்று (23) நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தில் மக்களுடன் கலந்துரையாடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொள்கைக்கான ஆணை
தீவக மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் ஊறித் திளைத்தவர்கள்.

தமிழ்த் தேசியக் கொள்கையே அவர்களது மாறாத நிலைப்பாடு. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கொள்கைக்கான ஆணையாகவே அவர்கள் தமது வாக்குகளைப் பிரயோகிப்பார்கள்.
இந்த மண்ணும், மக்களும் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri