இந்தோனேசிய காட்டுத்தீ : பல நாடுகளில் பரவும் கடுமையான புகை மூட்டம்
இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் பல வாரங்களாகத் தொடரும் காட்டுத்தீ காரணமாக உருவான அடர்ந்த புகை மூட்டம், அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பரவிப் பெரும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் இன்று தொடங்கும் புகழ்பெற்ற எஃப்1 பந்தயத்தின் போது, இந்த நச்சுப் புகை மூட்டம் காரணமாகக் காற்றின் தரம் வழக்கத்தை விட மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
தீவிரமடைந்துள்ள எல் நினோ காலநிலை
புகைப் மூட்டத்தின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, மலேசியாவின் பல மாநிலங்களில் அதிகாரிகள், பாடசாலைகளை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் மட்டும், இந்தக் காட்டுத்தீ புகையால் ஏற்பட்ட சுவாசப் பாதை நோய்த்தொற்றுகளால் சுமார் 1,75,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ளது.
விவசாயிகள் மற்றும் பெருநிறுவனங்கள் காடுகளையும் தாவரங்களையும் அழித்து நிலத்தைச் சுத்தப்படுத்துவதற்காகக் கையாளும் மலிவான 'வெட்டி எரிக்கும் சட்டவிரோத முறையே இதற்கான முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது.
நடப்பாண்டில் தீவிரமடைந்துள்ள 'எல் நினோ' காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி, இந்தக்;காட்டுத்தீ, வழக்கத்தை விட மிக மோசமான நிலையை எட்டுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
அதேநேரம், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கடந்த சில ஆண்டுகளில் பதிவான மிக மோசமான காட்டுத்தீப் பருவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
மகிந்தவுக்கு பதிலாக கைது செய்யப்பட்ட ஷிரந்தி! கை விலங்கோடு மக்களிடம் காட்சிப்படுத்த தீர்மானம் - வலுக்கும் எதிர்ப்பு