தமிழ்நாட்டு இடைத்தேர்தல் முடிவுகள் - 2 தொகுதிகளின் அபார வெற்றியை கொண்டாடும் முதலமைச்சர் விஜய்
புதிய இணைப்பு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக தனது அபார வெற்றியைப் பதிவு செய்து, 105 ஆசனங்களிலிருந்து 109 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் விஜய் தனது சக அமைச்சர்களுடன் இணைந்து, தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள தனது பாணியிலான செய்கையை அலுவலகத்தில் செய்து மகிழ்ந்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

முதலாம் இணைப்பு
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
தாராபுரம் தொகுதி
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் இடம்பெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இது தவெக அரசின் சுமார் 4 மாத கால ஆட்சிக்கான முக்கிய மதிப்பீடாகப் இந்த தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன.

தாராபுரம் தொகுதியில் 21வது சுற்று முடிவில், தவெக வேட்பாளர் சத்யபாமா 62851 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக, திமுக வேட்பாளர் சுகன்யா 53013 வாக்குகள் பெற்றுள்ளார். இருவரிடையே 9838 வாக்குகள் வித்தியாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அதிமுக வேட்பாளர் பானுமதி 41484 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 4,973 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் 1106 வாக்குகள் பெற்றுள்ளார்.
மதுராந்தகம் தொகுதி
மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை, 14வது சுற்று முடிவில், 50206 வாக்குகளைப் பெற்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் பரந்தாமன் 35923 வாக்குகளைப் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே 14,283 வாக்குகள் வித்தியாசம் நிலவுகிறது. அதிமுக வேட்பாளர் கனிதாசம்பத் 31175 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 1,753 வாக்குகள் பெற்றுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி 1389 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இடைத்தேர்தலின் பொழுது ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், இதன் காரணமாக வாக்களிப்பு செயன்முறை சற்று இடைநிறுத்தப்பட்டு, அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக இடைத்தேர்தலில் தவெக வெற்றிப் பெற்று, தமது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டுமா, என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan