கடற்றொழிலாளர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது : சுப்பிரமணியம்

Indian fishermen Sri Lanka Fisherman
By Kajinthan Aug 07, 2024 01:28 AM GMT
Report

அரசியல் நாடகத்துக்காக இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்று(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

நிரந்தர தீர்வு

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்றொழிலாளர்கள் வெளியிட்டுள்ள கோரிக்கைக்கு அமைவாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர், இலங்கை கடற்றொழிலாளர்களுடன் ஏற்படுகின்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்பாக இருக்கிறது என்ற கருத்தை கூறியதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை  ஊடக வாயிலாக தெரிவித்துள்ளார்.

தனது அரசியலுக்காக, தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்திய இழாவைமடி கடற்றொழிலாளர்களுக்கு தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதியளித்தமை மன வருத்தத்திற்குரிய ஒரு விடயம். உண்மை விடயத்தை அவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

கடற்றொழிலாளர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது : சுப்பிரமணியம் | Indo Sri Lankan Fishermen Issue

அண்ணாமலை தனது அரசியலுக்காக பேச்சுவார்த்தை ஒன்று நடத்த வேண்டும் என்று இந்திய கடற்றொழிலாளர்களை ஏமாற்றுவதற்கான வேலையை நடத்துவதாக நாங்கள் கருதுகின்றோம். இறைமையுள்ள நாட்டுக்குள்ளே அந்நிய நாட்டவர்கள் அத்துமீறி உள் நுழைவது ஒரு மாபெரும் குற்றமாகும்.

Sea of Sri Lanka என்று அழைக்கப்படுகின்ற இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்களால் ஏற்படுகின்ற விளைவின் காரணமாகவே இலங்கை கடற்படை இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யக்கூடிய நிலைமை ஏற்படுகின்றது.

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை

அனர்த்தங்களும் ஏற்படுகிறது. நாங்கள் கேட்டுக் கொள்வது யாதெனின் இந்திய இழுவை படகுகள் இரண்டு மாதங்கள் தமது தொழிலை நிறுத்தி இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால், 2016ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக, அதனை தொடர்ச்சியாக பேசி நிரந்தர தீர்வினை ஏற்றுவதற்கு எப்போதும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

பேச்சு வார்த்தைக்கு இலங்கை கடற்றொழிலாளர்கள் எப்போதும் இடையூறாக இருக்க மாட்டார்கள் என்பதை அண்ணாமலை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

கடற்றொழிலாளர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது : சுப்பிரமணியம் | Indo Sri Lankan Fishermen Issue

இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்பரப்பினுள் வரவிடாமல் தடுப்பது அண்ணாமலை மற்றும் வெளிவிவகார அமைச்சருடைய தலையாய கடமையாக இருக்கின்றது.

உங்களது நாட்டுப் படகுகள் எங்களது நாட்டுக்குள் வராமல் தடுப்பதன் ஊடாக நிரந்தர தீர்வினை எட்டலாமே தவிர, நீங்கள் நினைப்பது போல் ஒரு அரசியல் நாடகப் பேச்சுவார்த்தை நடத்துவது தீர்வளிக்காது என்பதை திட்டவட்டமாக சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.

ரணிலுக்கு ஆதரவளிக்காதவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்க நேரிடும் : கஞ்சன விஜேசேகர

ரணிலுக்கு ஆதரவளிக்காதவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்க நேரிடும் : கஞ்சன விஜேசேகர

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US