பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்! மகா சங்கத்தினரை ஒன்றிணையுமாறு கோரிக்கை
சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(08.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்துக்குப் பாதிப்பு
மேலும் உரையாற்றுகையில், "கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விதம் மற்றும் அவரது காவி உடை அகற்றப்பட்டமை என்பன பௌத்த சமூகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். காவி உடை என்பது நாட்டின் அடையாளம் என்பதால், அதற்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும்.

தற்போதைய அரசுக்கு வாக்களித்த பெரும்பான்மையான இடதுசாரி மற்றும் தேசியவாத சிங்கள பௌத்த மக்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளனர்.
அரசு பல்வேறு தரப்பினரைப் பயன்படுத்தி பௌத்த சமூகத்தின் உரிமைகள் மற்றும் நம்பிக்கைகள் மீது மறைமுகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
பௌத்த மதத்துக்குப் பாதிப்பு ஏற்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், மகா சங்கத்தினர் தங்களுக்குள்ள அரசியல் கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பௌத்த சமூகத்தைப் பாதுகாக்க ஒன்றுபட்டு அணிதிரள வேண்டும். மக்கள் நம்பிக்கைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மக்களின் கொந்தளிப்பை யாராலும் தடுக்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri