சசீந்திர ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு : மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அத்துடன், தற்போதைய குற்றப்பத்திரிகையின் கீழேயே வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன இன்று(08.10.2026) உத்தரவிட்டுள்ளார்.
10 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு
2022 மே 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளின் போது, செவனகல - கிரிஇப்பான்வெவ பகுதியில் மஹாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடம் சேதமடைந்ததாகக் கூறி, இழப்பீடாக 8.85 மில்லியன் ரூபாயைக் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தனர் என குறித்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தவிர, நட்டஈட்டு அலுவலகத்தின் முன்னாள் பணிப்பாளர் சேபாலிக சமன் குமாரி மற்றும் மஹாவலி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது அத்துடன், 30 சாட்சிகளும் 38 ஆவணங்களும் சான்றுகளாகப் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஷிரந்தி எமது கட்சியின் உறுப்பினர் அல்ல! நாட்டை விட்டு ஓடப் போகும் திருடனைப் போல கைது : பொதுஜன பெரமுன அறிவிப்பு
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam