வீரர்களை தெரிவு செய்ய இன்று கூடும் இந்திய தேர்வாளர்கள்
செம்பியன்ஸ் கிண்ணம் 2025க்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக அஜித் அகர்கர் தலைமையிலான தேசிய தேர்வுக் குழு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைமையகத்தில் இன்று (18) கூடுகிறது.
தற்காலிக அணியை சமர்ப்பிக்கும் காலக்கெடுவவை இந்தியா ஏற்கனவே தவறவிட்டுள்ள நிலையில், இன்று அல்லது நாளை இறுதி அணி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் சிட்னியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா பந்து வீச வராத நிலையில், அவரது உடற்தகுதி குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வாளர்கள்
போட்டி வழிகாட்டுதல்களின்படி, போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்னர் வரை, அணிகள் தங்கள் வீரர்களில் மாற்றங்களைச் செய்யலாம், எனவே தற்போதைய அணியில் பும்ராவின் பெயரும் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேவேளை உபாதையில் இருந்து குணமாகி வரும் மொஹமட் சமியும் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தேசிய கிரிக்கெட் கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
எனினும்;, செம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வாளர்கள் அவரைத் தேர்வு செய்கிறார்களா என்பதில் தெளிவில்லை.
இந்திய கிரிக்கட் தரப்புக்கள்
ராகுல் மற்றும் ரிசப் பந்த் இருவரையும் சேர்த்துக் கொள்வார்களா அல்லது சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோருக்கான விருப்பங்கள் ஆராயப்படுமா? என்பதும் கேள்வியாக உள்ளது.
ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார், கடினமான சூழ்நிலையை சந்தித்தாலும், விராட் கோலி ஒரு முக்கிய துடுப்பாட்ட வீரராக இருப்பார்.
யசஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் ஒரு தெளிவான தேர்வாக இருப்பார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான அணியையும் தேர்வாளர்கள் தேர்வு செய்ய உள்ள நிலையில், விஜய் ஹசாரே கிண்ணப்போட்டிகளில், ஏழு இன்னிங்ஸ்களில் 752 ஓட்டங்களை எடுத்துள்ள கருண் நாயர், அணியில் சேர்க்கப்படுவாரா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளதாக இந்திய கிரிக்கட் தரப்புக்கள் கூறுகின்றன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |