சர்வதேச லீக் 20க்கு20 போட்டிகளில் அசத்திய இலங்கை வீரர்
ILT20 என்ற சர்வதேச லீக் 20க்கு20 போட்டிகளில் இலங்கை வீரர் அவிஸ்க பெர்ணான்டோ (Avishka Fernando) சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
துபாய் கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சார்ஜா வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை வீரர் அவிஸ்க பெர்னாண்டோ 27 பந்துகளில் 81 ஓட்டங்களை பெற்றார்.
அதில் 8 சிக்சர்களும் அடங்கியிருந்தன. 16 பந்துகளில் அவிஸ்க தனது அரைசதத்தை எட்டினார்.
வேகமான அரைச்சதம்
இதன்மூலம் அவர், பல சாதனைகளை முறியடித்தார்.

இது சர்வதேச லீக் 20க்கு20 வரலாற்றில் வேகமான அரைசதம் மற்றும் 20க்கு20 போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த வேகமான அரைச்சதமாக அமைகிறது.
முன்னதாக இலங்கையின் சாதனை டி.எம். தில்சான் வசம் இருந்தது, அவர் சசெக்ஸ் அணிக்கு எதிராக 18 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 12 மணி நேரம் முன்
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri