இலங்கையை நோக்கி விரையும் சீன கப்பல் தொடர்பில் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்
இலங்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சீன கப்பலின் நடமாட்டத்தை அவதானித்து கொண்டிருப்பதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் பிரின்டிற்கு தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் பிரின்ட் வெளியிட்டுள்ள தகவலில்,“இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லும் சீன கப்பலின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணிக்கின்றது.
சீன கப்பல் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையும் என அறியமுடிகின்றது.

யுவான் வாங்-5 என்ற சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விண்வெளி மற்றும் செய்மதி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பிட்ட கப்பலின் வருகையை முதலில் மறுத்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பின்னர் 11 முதல் 17ஆம் திகதிக்குள் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்பதை உறுதி செய்துள்ளது.
தனது பாதுகாப்பு பொருளாதார நலன்கள் தொடர்பான விடயங்களில் தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் அரின்டம் பக்சி ஊடகங்களிற்கு தெரிவித்ததையடுத்தே இலங்கை இதனை தெரிவித்துள்ளது.

எனினும் சீன கப்பலின் அம்பாந்தோட்டை விஜயத்திற்கான சரியான நோக்கம் தெரியவரவில்லை என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏவுகணை பரிசோதனையை மேற்கொள்ளும் போதே இவ்வாறான கப்பல்கள் சீனா அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் புறப்படத் தொடங்கும். இது போர் கப்பல் இல்லை, இவ்வாறான கப்பல்கள் முன்னரும் இந்த பகுதியில் நடமாடியுள்ளதை நாங்கள் கண்காணித்துள்ளோம்”என தெரிவித்துள்ளது.
| சீன உளவுத்துறை கப்பல் விவகாரம்: கேள்விக் குறியாகும் இந்திய அரசாங்கத்தின் உதவிகள்- எச்சரிக்கும் இராதாகிருஷ்ணன் |
| சீனாவினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ராஜதந்திர நெருக்கடி |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 23 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan