சீனாவின் ‘யுவான் வான் 5' : சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடன், இலங்கை பேச்சுவார்த்தை
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் சீனாவின் ‘யுவான் வான் 5’, கண்காணிப்பு கப்பலை நிறுத்துவது தொடர்பாக ஒரு இணக்கமான தீர்வை எட்டுவதற்கு, சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடன், இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னதாகவே, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றால், இந்த கப்பலை நங்கூரமிடுவதற்கான அனுமதி பல வாரங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் கப்பல்
இந்த கப்பல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகிறது. ஆகஸ்ட் 17ஆம் திகதி அங்கிருந்து புறப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையில் இந்தியா உடன்படவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை அதிகாரிகள், கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பொருளாதார நெருக்கடிக்குள், இலங்கை, இந்தியாவுடன் ராஜதந்திர பிரச்சினைக்குள் தள்ளப்படப் போகிறது என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ராஜதந்திர நெருக்கடி |
கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தை
இந்தியாவும் சீனாவும் இரண்டு பெரிய கடன் வழங்குபவர்கள், அவர்களின் ஒத்துழைப்பு முக்கியமானது. அத்துடன் இலங்கை அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களை ஆரம்பிக்க தயாராக இருக்கும் நேரத்தில் நிலைமையை நிர்வகிப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை "யுவான் வாங் 5, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை நடத்தும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
அமெரிக்கா சென்ற கடற்படை மாலுமிகள் கப்பலில் இருந்து தப்பியோட்டம் |