தலைமன்னாரில் இந்திய கடற்தொழிலாளர்கள் அறுவர் கைது (Photos)
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் 06 இந்திய கடற்தொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள்
கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 6 பேரும் இன்று தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களை ஒப்படைக்கவுள்ளனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.