கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (28.11.2025) முற்பகல் ஊர்காவற்றுறை நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து நேற்றிரவு 9.45 மணியளவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் இந்திய கடற்தொழிலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விசாரணை
கைதான குறித்த மூவரும் கடற்படையினரால் இலங்கை கரையோர பாதுகாப்பு படையினரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினரிடம் பாரப்படுத்தபட்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முற்பகல் 11 மணியளவில் ஊர்காவற்றுறை நீதவான் வசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |