கனடா அமைச்சரவையில் மாற்றம்: நான்கு இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பதவி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்துள்ளதுடன், சில அமைச்சர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதிதாக சில அமைச்சர்கள் கேபினட்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த், தற்போது கனடா கருவூல வாரியத்தின் தலைவராக பதவியேற்றுள்ளார்.
ஏழு அமைச்சர்கள் பதவிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், முக்கியமான பொறுப்புகள் வகித்த பெரும்பாலானவர்களுக்கு வெவ்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அனிதா ஆனந்த் தவிர்த்து, இந்திய வம்சாவளியினர்களான Harjit Sajjan, Kamal Khera, புலம்பெயர் பெற்றோருக்குப் பிறந்தவரான Ruby Sahota மற்றும் Arif Virani ஆகியோருக்கு கேபினட்டில் முக்கிய பொறுப்புக்களை பிரதமர் ட்ரூடோ வழங்கியுள்ளார்.
2025 இல் ட்ரூடோ பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவையில் செய்யப்படும் மிக முக்கிய மாற்றம் இது எனவும் கருதப்படுகின்றது.