காணாமல் போயுள்ள இந்திய வர்த்தக கடற்படை மாணவ சிப்பாய்
இலங்கை கடற்பகுதிக்கு அப்பால், ஒரு எண்ணெய் தாங்கிக் கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய வர்த்தக கடற்படை மாணவ சிப்பாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கரந்தீப் சிங் ராணா என்ற அந்த மாணவர், செப்டம்பர் 20ஆம் திகதி ஈராக்கில் இருந்து சீனா நோக்கிய கப்பல் பயணத்தின்போது, இலங்கைக்கு அருகில் காணாமல் போனதாக அவரது தந்தை நரேந்திர சிங் ராணா தெரிவித்துள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த கரந்தீப், கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து ஈராக்கிற்குச் செல்லும் எண்ணெய் தாங்கியில் ஏறியுள்ளார்.பின்னர், அக்கப்பல் இலங்கை வழியாக சீனா நோக்கிச் சென்றுள்ளது.
காணவில்லை
செப்டம்பர் 20ஆம் திகதி இரவு 9.30 மணியளவில், மும்பையில் உள்ள எக்ஸிகியூட்டிவ் ஷிப் மெனேஜ்மென்ட் (ESM) நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், பலத்த தேடலுக்குப் பின்னரும் கரந்தீப் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் கரந்தீப்பின் தந்தை நரேந்திர சிங் ராணா கூறியுள்ளார்.
தொடர் விசாரணைகளுக்குப் பிறகு, கரந்தீப் தனியாக கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றதாகவும், அதன் பிறகு அவரை காணவில்லை என்றும் நிறுவன அதிகாரிகள் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
பதவி உயர்வு
தனது மகனைத் தேடித் தருமாறு முதலமைச்சர் இணையத்தளம், வெளியுறவுத் துறை அமைச்சு உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலும் குடும்பத்தினர் உதவி கோரியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
வர்த்தக கடற்படையில் சேருவதே கரந்தீப்பின் நீண்டகால லட்சியமாக இருந்தது என்றும், விரைவில் அவர் மூன்றாம் நிலை அதிகாரியாகப் பதவி உயர்வு பெறவிருந்தார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
