மனிதக்கடத்தல் வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
இலங்கையர்களுடன் தொடர்புடைய மனிதக்கடத்தல் வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் மீது இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர்.
குற்றம் சுமத்தப்பட்ட தினகரன் அய்யா(Thinagaran Ayya), காசி விஸ்வநாதன் (Kaasi Visvanadhan), ரசூல்(Rasul), சதாம் உசேன்(Sadham Ussaine), அப்துல் முஹீது (Abdhul Muheedhu) மற்றும் சோக்ரடீஸ் (Sokratis) ஆகியோர், தமிழ்நாட்டில் வசிப்பவர்கள், அவர்கள் மீது, ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய-இலங்கை கடல் எல்லையின் ஊடாக கனடாவுக்கு குடியேறுவதாகக் கூறி இலங்கைப் பிரஜைகளை கவர்ந்திழுத்து இந்தியாவில் பல்வேறு இடங்களில் அடைத்து வைத்த குற்றச்சாட்டும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அவர்களால் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படும் 25 இலங்கையர்கள் மீது மங்களூரு தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த சோதனைகளின் போது, மேலும் 13 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், 38 இலங்கையர்கள் 2021 பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை நான்கு குழுக்களாக இந்தியாவுக்கு கடத்தப்பட்டனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களால், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அவர்கள், பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இலங்கையில் இருந்து, கடத்தப்பட்ட 38 இலங்கையர்கள் அனைவரும் இந்திய துறைமுகங்கள், ஊடாக கனடாவுக்கு அனுப்பப்படுவதாக உறுதியளிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 3.5 முதல் 10 லட்சம் இலங்கை ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
