தமிழர் தரப்புடனான பேச்சு வார்த்தை திடீர் ரத்து! அவசரமாக இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ள உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரமாக இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஏழு அரசியல் கட்சிகளுடன் நடாத்தப்படவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் அவசரமாக தாய்நாட்டுக்கு அழைக்கப்பட்ட காரணத்தினால் இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக உயர்ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தை நடாத்தப்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எவ்வாறெனினும், இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் இந்த பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்தி
தமிழர் தரப்பின் மோடிக்கான ஆவணம் கையளிக்கப்படவில்லை! - வெளியான தகவல்
