இலங்கையில் டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு நிதி வழங்கியுள்ள இந்தியா
இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு 25 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இந்திய உதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டிஜிட்டல் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நேற்றைய தினம் (26.11.2026) டிஜிட்டல் ஸ்ரீலங்கா உச்சிமாநாடு 2026 நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இந்தியா - இலங்கை இருதரப்பு உறவு

மேலும் தெரிவிக்கையில், இந்தியா - இலங்கை இருதரப்பு உறவில் தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியன முக்கிய தூண்களாக உருவெடுத்து வருவதாக உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
கடந்த தசாப்தத்தில் இந்தியா முன்னெடுத்துள்ள டிஜிட்டல் மாற்றத்தின் அளவு மற்றும் வேகம் குறித்து எடுத்துரைத்த அவர், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, ஒன்றிணைந்து செயற்படும் திறன் மற்றும் திறந்த அணுகுமுறை ஆகிய அடிப்படைக் கொள்கைகளின் கீழ், மக்கள் தொகையின் பெரும்பகுதியை உள்ளடக்கும் வகையிலான டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை (Digital Public Infrastructure - DPI) உருவாக்குவதில் இந்தியா பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

தொழில்நுட்பத்தின் ஊடாக மக்களை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் அணுகுமுறையையும், இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு ஏற்ப தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டமான (Sri Lanka Unique Digital Identity - SLUDI) செயற்திட்டத்திற்காக இந்தியா 25 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளமை குறித்தும் உயர்ஸ்தானிகர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 23 மணி நேரம் முன்
Tamizha Tamizha: முன்னாள் காதலியை நினைத்து கணவர் செய்யும் செயல்! தரமான பதிலடி கொடுத்த மனைவி Manithan
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri