வடக்கில் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிளிநொச்சி- இரணைதீவிற்கு அண்மித்த கடற்பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி அதிகாலை இரணைதீவிற்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, இன்றையதினம்(22) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தண்டப்பணம் விதிப்பு
இதன்போது, கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை பயன்படுத்தி மீன்பிடித்த முதலாவது குற்றச் சாட்டுக்கு ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரண்டாவது குற்றச் சாட்டுக்கு எட்டுப் பேருக்கும் தலா ஐம்பதாயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 34 நிமிடங்கள் முன்

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
